கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் தமிழரசி என்பவர் கணவரை பிரிந்து 4 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 4 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தமிழரசியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்ததாகவும், கட்டட வேலை செய்யும்போது அங்கு பணிபுரிந்த வசந்த் என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தகாத உறவுக்கு தடையாக இருந்த தனது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழிரசி மற்றும் வசந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.