மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோபோலியில் மும்பை – புனே விரைவுச் சாலையில் சென்ற கனரக லாரி ஒன்று பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட கோர விபத்தில் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் ஏராளமான அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்த காரின் காட்சிகள் வெளியாகி உள்ளது