கங்கை கொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம், அரியலூர் மாவட்டம் பொன்னேரி சென்றடைந்தார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பொன்னேரியில் கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடி, காரில் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் சென்றார்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தமிழர் பாரம்பரிய உடை அணிந்திருந்த பிரதமர் மோடி சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.