பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா - சிறப்பு தொகுப்பு!
Jul 19, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து பகைத்தபோதும், மனிதாபிமான அடிப்படையில் வங்கதேசத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா… வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் வெடித்துச் சிதறியதில் பலத்த தீக்காயமடைந்தவர்கள் குணமடைய இந்திய மருத்துவக் குழு இரவு பகலாக போராடி வருகிறது.

இடியாக காதை கிழித்த சத்தம்… அலறி துடித்த மாணவர்கள்.. தீயில் கருகிய உடல்கள்…. வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளி கட்டடத்தில் விழுந்து நொறுங்கிய கோரக் காட்சிகள் தான் இவை..

கடந்த 21ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI என்ற பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்துள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வங்கதேச வரலாற்றிலேயே மிக கோர விபத்தாகக் கருதப்படுகிறது.இந்நிலையில், சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவியையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக,விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் இருந்து தீக்காய சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் குழு வங்கதேசத்திற்கு விரைந்தது.
தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரை செய்யவும் மருத்துவக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர், சீனாவைச் சேர்ந்த மருத்துவக்குழுவினரும் தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

அண்மைக்காலமாக சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஈடுபட்டு வருகிறது. வங்கதேசம் பகையை காட்டும்போதும், இந்தியா மனிதாபிமானத்தோடு மருத்துவ உதவி செய்து வருவது உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.

Tags: pakistanchinaBangladeshBangladesh Air Force fighter jet exploded.F-7 BGI trainer aircraft crashed
ShareTweetSendShare
Previous Post

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

Next Post

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

Related News

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies