தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் மோடி சோழ சாம்ராஜ்யத்தில் பொற்கால ஆட்சியை வழங்கிய ராஜேந்திர சோழனின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிட்டதோடு, தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் மத்திய அரசு சார்பில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
பாரதப் பிரதமர் தொன்றுதொட்ட நம் தமிழ் மொழி மீதும், தமிழர் பாரம்பரியம் மீதும் அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்பதற்கான மற்றுமொரு சான்று இது என்றும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமகிழ்வில் ஆழ்த்தியுள்ள இந்த அறிவிப்பை வெளியிட்ட பாரதப் பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.