திருப்பூரில் நகை வாங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்ற நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி அடுத்து பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பிரகதீஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இங்கு வந்த 4 பெண்கள் நகை வாங்குவது போல் நாடகமாடி ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு கிலோ வெள்ளி பொருட்களைத் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து பிரகதீஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த 4 பெண்களைக் கைது செய்தனர்.