விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கவுதம் தின்னனுரி இயக்கத்தில் உருவான ‘கிங்டம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் பாக்கியஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் நேற்றிரவு வெளியான நிலையில், தமிழ் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.