கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் நடைபெற வேண்டியும் 15வது ஆண்டாகத் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் தெற்கு மைலாடி சுற்றியுள்ள ஏராளமான பெண்கள் கலந்து மஞ்சள், குங்குமம், தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.