தெலுங்கு நடிகர் நித்தின் நடித்துள்ள ‘தம்முடு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நித்தின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘தம்முடு’ திரைப்படம், மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்த படத்தில் காந்தாரா பட புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாகவும், லயா, சுவாசிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியானபோதிலும் வசூலில் ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 1-ம் தேதி ‘தம்முடு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.