காப்புரிமை விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கைச் சென்னைக்கு மாற்றக் கோரிய இசையமைப்பாளர் இளையராஜாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாடல் உரிமைகள் மற்றும் ராயல்டிகள் தொடர்பான பதிப்புரிமை ஒப்பந்தங்களை மீறியதாகக் கூறி இளையராஜாவின் நிறுவனத்துக்கு எதிராகச் சோனி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இளையராஜா நிறுவனத்திடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, இசையமைப்பாளர் இளையராஜாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.