ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோரின் பேருந்துகளை, அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் சின்ஹா, அமர்நாத் யாத்திரைக்காக நாடு முழுவதிலுமிருந்து வந்த 1000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர் எனக் கூறினார்.
இதுவரை 3.77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை முடித்துள்ளனர் எனக் கூறிய மனோஜ் சின்ஹா, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.