திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி முருகனுக்குத் தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடிப்பூரத்தை ஒட்டி முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகனுக்கு அதிகாலை 3 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தங்கள் உடலில் வேல் அழகு குத்திக் கொண்டு ரதம் இழுத்துச் சென்றனர்.
மேலும் பால் காவடி, மலர் காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை மனமுருகி வழிபட்டனர்.