ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை பட்டியலில், விராத் கோலியை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், போட்டியின் 4-ம் நாள் முடிவு வரை இந்திய கேப்டன் சுப்மன் கில் 3 சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 697 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் ஒரே தொடரில் 655 ரன்கள் சேர்த்திருந்த முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.
இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 732 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ள நிலையில், அவரது சாதனையையும் சுப்மன் கில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.