சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதைத் தான் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்கள் விளாசினார். அதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி, 13 ஆயிரத்து 409 ரன்களுடன் அதிக ரன் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.
இந்த தரவரிசையில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், சச்சினின் சாதனையை முறியடிக்க முடியுமா என ரூட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் எனவும், அவர் சாதித்த அனைத்து விஷயங்களும் நம்ப முடியாதவை என்றும் புகழாரம் சூட்டினார்.