மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தேர்வாகினர். ஏற்கனவே திமுக சார்பில் கமல்ஹாசன் உட்பட 4 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இன்பதுரை மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டார்.
அவரை தொடர்ந்து தனபால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது.