இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
பொலநறுவை வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டு வந்து பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காட்டு யானையைப் பத்திரமாக மீட்டனர்.