காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
2 ஆண்டுகளைக் கடந்து இஸ்ரேல் – காசா போர் நீடித்து வரும் நிலையில், போதிய உணவு கிடைக்காமல் காசாவில் பட்டினி பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், இஸ்ரேலுக்குச் சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட வழித்தடத்தில் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைத் தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எடுத்துச் செல்லலாம் என்றும், மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.