முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி – பத்மாவதி தம்பதியின் மூத்த மகனான மு.க.முத்து, கடந்த 19-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது மனைவி சிவகாமி சுந்தரிக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நடிகர், இசைக்கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கிய மு.க.முத்து, திரைப்படம் மற்றும் அரசியலில் ஆற்றிய பணிகளுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.