ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமானச் சேவை தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஆனால், இதன் பயண நேரம் சுமார் 10 நாட்கள் என்பதால், நேரடி விமானச் சேவை தொடங்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன.
அந்த வகையில், தற்போது மாஸ்கோ-பியாங்க்யாங் இடையே நேரடி விமானச் சேவை நேற்று தொடங்கியது.
இந்த விமானம் வாரத்துக்கு 2 முறை இயங்கும் என ரஷ்ய விமான போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.