காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் கோயிலில், ஆடிப்பூர ஆண்டாள் உற்சவ விழாவை ஒட்டி, பெருமாளுக்கும், அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து வேதாந்த தேசிகர் சன்னதியில் வைத்து விளக்கொளி பெருமாளுக்கும் – அம்மனுக்கும் ஊஞ்சல் சேவை மற்றும் மாலை மாற்றுதல் வைபவங்கள் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விளக்கொளி பெருமாளும் – அம்மனும் பக்தர்களுக்குக் காட்சியளித்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.