புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.
பின்னர் பேசிய ஆயிரம் அரசுப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாகக் கூறினார். மேலும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.