நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்துப் பாதுகாத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை மாலை 5 மணியளவில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.