பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற தீவிரவாதிகள், ஸ்ரீநகர் அருகே ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து, ராணுவம் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக என் கவுண்டர் என ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.