நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பதினேழு எம்.பி.க்களுக்கு “சன்சத் ரத்னா” விருது வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லியில் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார். அப்போது, திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பதினேழு எம்.பிகளுக்கு சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டன.