மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதை வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.