மகளிர் ஐரோப்பியக் கால்பந்து இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடந்த 14-வது மகளிர் ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் இங்கிலாந்து கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்துள்ளது.