தஞ்சை மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம், கடந்த 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் 34 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரிப் பாக்கி வைத்துள்ளதாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் எம்.கே.மூப்பனார் சாலையில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அமைந்துள்ளது. அறிவாலயம் திறக்கப்பட்ட 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சொத்து மற்றும் பாதாளச் சாக்கடை என 34 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை, மாநகராட்சி தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக கவுன்சிலர்கள் சமீபத்தில் முடிவு செய்தனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது மேயருக்கும், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பழிவாங்கும் நோக்கில், மேயர் தரப்பினர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று, திமுக கவுன்சிலர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.