ஜெர்மனியின் டியூஸ்பர்க்கில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடம் வெடிமருந்துகளைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டது.
ஹோச்சைட் மாவட்டத்தின் மறுவடிவமைப்புக்காக அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 1970களில் டியூஸ்பர்க் பகுதியில் கட்டப்பட்ட 22 மாடிக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
இதற்காகக் கடந்த 2020ம் ஆண்டு முதல் அங்குக் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 6 பெரிய கட்டங்களில் 2 பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளை ஜெயண்ட் என்றழைக்கப்பட்ட 3வதும் பெரிய கட்டடத்தில் வெடி மருந்துகள் நிரப்பப்பட்டுப் பாதுகாப்பான முறையில் இடித்து அகற்றப்பட்டது.