இந்தியா – வங்கதேச சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5 ஆயிரம் கேமராக்கள் அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கேமராக்கள் இரவு நேர காட்சிகளையும் துல்லியமாகப் படம்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் வங்கதேசத்தவா்கள் நாடு கடத்தப்படுவதையும், போதைப்பொருள்கள், ஆள்கடத்தல் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் பதிவு செய்து ஆதாரமாகப் பயன்படுத்த இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.