இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 4-வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களே தொடருகின்றனர்.
அதன்படி, அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.