நீலகிரி மாவட்டம் உதகை அருகே படுகர் இன மக்கள் அறுவடை திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத் தோட்டக் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளனர். இதனை அறுவடை செய்யும், நிகழ்வை தெவ்வப்பா என அறுவடை திருவிழாவாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் 33 கிராம படுகர் இன மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குலதெய்வத்தை வழிபட்டு அறுவடை திருவிழாவை விமர்சையாக கொண்டாடினர். மேலும் பாரம்பரிய உடையணிந்து அவர்கள் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.