பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கல்கி 2898 ஏடி படத்தையடுத்து பிரபாஸின் அடுத்த பெரிய படமாக தி ராஜா சாப் உருவாகி வருகிறது. நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் பிரபாஸின் தாத்தாவாக நடித்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளை ஒட்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், படம் டிசம்பர் ஐந்தாம் தேதி வெளியாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.