விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றப்பட்டது.
உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவரது வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்த ராமர் பொதுப்பாதையில் வேலி அமைத்து எதிர்ப்பு தெரிவித்தார். இந்த அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்குச் சென்ற நிலையில் ராமர் தாமாகவே முன்வந்து வேலியை அகற்றினார். மேலும் குடிநீர் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.