திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாளையொட்டி உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
உண்ணாமுலை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் அம்பாள் உற்சவ மூர்த்திகளுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு நாளில் அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நடந்த தீமிதி நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.