பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேக்கரி கடை உரிமையாளரை உறவினர்கள் கட்டிவைத்துத் தாக்கினர்.
திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்துள்ளார். இவர், அந்த பகுதியில் உள்ள 9ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை தேடி வந்தனர்.
இந்நிலையில், பேக்கரி கடையிலிருந்த கார்த்திகை மாணவியின் உறவினர்கள் கட்டிவைத்துத் தாக்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார்த்திகை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.