சென்னை அண்ணாநகர் பகுதியில் வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் பகுதியில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதி முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், இருசக்கர வாகனத்தில் வந்த ஜெயபிரதீப் என்ற நபரை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அப்போது அவரிடம் அரிவாள் இருப்பதை அறிந்த போலீசார், ஜெயபிரதீப்பை கைது செய்து ஆயுதத்தைப் பறிமுதல் செய்தனர்.