மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாலியைச் சேர்ந்த விசிக பிரமுகர் குணா என்பவருக்கும், அவரது உறவினர்களான பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், தவமணி ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன் விரோதம் காரணமாக இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
			















