சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மாளம்மன் தெருவை சேர்ந்த அருண்மொழி மீது கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த அருண்மொழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அருண்மொழியை கொலை செய்த ரூபன், கமல், செந்தில் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.