தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் டயர் வெடித்துத் தீப்பிடித்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கோயில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.