திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், மணப்பாறை வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலைப் பூட்டினர்.