மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி டி 20 தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அண, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது.
கடைசி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 17 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 173 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 க்கு 0 என்ற கணக்கில் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.