திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியைப் பிடித்து மருமகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வம், தெய்வானை தம்பதிக்குத் திருமணமாகி 4 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மனைவி தெய்வானை குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காமல், செல்போனில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், செல்வத்தின் தாயார் மாணிக்கம்மாளை வீடு புகுந்து தெய்வானை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.