தனது சாதனை பயணம் தொடரும் என்று செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் முக் பட்டம் வென்றார்.
இதுகுறித்து பேசிய அவர், வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டதாகவும், இந்த போட்டிக்காகத் தன்னை நன்றாகத் தயார்ப்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஹம்பியை வீழ்த்தி பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.