சென்னை மேடவாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து அடைந்துள்ளனர்.
கௌரிவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உரியப் பதில் அளிப்பது இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.