தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விளைநிலங்களை தங்கள் நிலம் எனக்கூறி வனத்துறையினர் மரக்கன்றுகள் நட வந்ததால் பதற்றம் நிலவியது.
கடமலைக்குண்டு அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் வசித்து வரும் மக்கள், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களை இணைத்து ஒருங்கிணைந்த மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றி அரசு உத்தரவிட்ட நிலையில், தாழையூத்து கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் அளவீடு பணிகள் மேற்கொண்ட வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தங்களது வாழ்வாதாரத்தை அழிக்க அரசு முயற்சி மேற்கொண்டால் கடும் போராட்டங்களை நடத்துவோம் எனக் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.