மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்புவனம் கோயில் காவலாளி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையைத் தொடங்கினர்.
திருப்புவனம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள தலைமைக் காவலர் கண்ணன் வீட்டில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைமை காவலர் கண்ணனின் கைப்பேசி கிடைக்காததால் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், திருப்புவனம் காவல் நிலையத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.