எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அஸ்டர் எஸ்யூவியின் விலையை உயர்த்தியுள்ளது.
சமீபத்தில் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காமெட் EV மற்றும் விண்ட்ஸர் EV கார்களின் விலையை எம்ஜி நிறுவனம் உயர்த்தியது.
இந்த சூழலில், அஸ்டர் எஸ்யூவியின் விலை 19 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 லட்சத்து 48 ஆயிரம் முதல் 17 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகவுள்ளது.