மண்சரிவால் தடைப்பட்டிருந்த தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கேரளாவின் எர்ணாகுளம், காசர்கோடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இடுக்கி மாவட்டம், மூணாறு சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழையால் தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்தது.
இதனால் மூணாறு, போடிமெட்டு, சோலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் பலர் சிக்கித் தவித்தனர். இதனைத் தொடர்ந்து சாலையில் விழுந்த பாறைகள், மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
தற்போது, தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இருப்பினும், மழை தொடரும் என்பதால் மக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.