உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!
Sep 23, 2026, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம், ஜப்பானின் ஹிரோசிமா பகுதியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டைப்போல்  14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கை, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்துள்ளது.

1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி 80 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் அப்பகுதியில் அணுகுண்டின் தாக்கம் குறைந்தபாடில்லை.

அணுகுண்டுவீச்சால், ஹிரோஷிமாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த பூகம்பத்தை,  ஹிரோஷிமாவில் வீசப்பட்ட “லிட்டில் பாய்” அணுகுண்டை போல், 14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். ரிக்டரில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம்  ஒரு நகரத்தை ஒரு நொடியில் சின்னாபின்னமாக்கும் ஆற்றல் கொண்டது.

8.8 ரிக்டர் அளவு பூகம்பம் என்பது, 60 லட்சத்து 27 ஆயிரம் டன் ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT)வெடிமருந்துக்கு ஒப்பானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பானும், ரஷ்யாவும் வளர்ந்த நாடுகள் என்றாலும், நிலநடுக்கத்தால் அந்நாடுகள் அடையும்  உயிரிழப்பும், பொருட்சேதமும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டோஹோகு பிராந்தியத்தில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பூகம்பமும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்தது. இதேபோன்று ரஷ்யாவில் கம்சட்கா பகுதியும் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 ஆயிரம் ஹிரோஷிமா அணுக்குண்டுகளுக்கு இணையாகப் பார்க்கப்பட்டது.

இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராத, கணிக்க முடியாத, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு  அழிவைத்  தரக்கூடியவை. அவற்றை முன்கூட்டியே கணித்தாலும், சேதத்தைத் தடுக்க முடியாது என்பதால், ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அவற்றை எண்ணி கவலை கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Tags: earthquakeThe earthquake that shook the world: equivalent to 14300 atomic bombsearthquakes in Russia
Share
Tweet
SendShare
Previous Post

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

Next Post

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

Related News

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies