தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி என்பவருக்கும் அவரது அண்ணன் மகன் மாற்றுத்திறனாளியான முருகானந்தம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், தேன்மலர் பள்ளி கட்டடம் அனுமதி பெற்ற முறையிலும் கட்டப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நில அளவை செய்ய வழக்கறிஞர் முருகானந்தம் தனது நண்பர்களுடன் சென்றபோது பள்ளியின் உரிமையாளர் தண்டபாணி கூலிப்படையினரை ஏவியை முருகானந்தத்தை அரிவாளால் தாக்கினார்.
இதில் வழக்கறிஞர் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாகத் தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.